நிகழ்ச்சி நிரல் (2024)

மே 24, 2024 முதல் நாள் அரங்கு

முதல் அரங்கு (மரபிலக்கியம்):


இரண்டாம் அரங்கு (சிறுகதை):

மூன்றாம் அரங்கு (அயல் நாட்டு இலக்கியம்):

***

மே 25, 2024 இரண்டாம் நாள் அரங்கு

முதல் அரங்கு:

இரண்டாம் அரங்கு (ஈழ இலக்கியம்):
மூன்றாம் அரங்கு (கவிதை):
நான்காம் அரங்கு (இந்திய நாவல்கள்):
  • நரேன் (இரவு 07:00 - 08:00)
    • (இந்திய நாவல்கள் - காச்சர் கோச்சர், விவேக் ஷான்பாக்)
  • கடலூர் சீனு (மதியம் 08:00 - 09:00)
    • (இந்திய நாவல்கள் - சப்தங்கள், ‍ வைக்கம் முகம்மது பஷீர்)

***

மே 26, 2024 மூன்றாம் நாள் அரங்கு

முதல் அரங்கு (மூத்த எழுத்தாளர் அரங்கு):
இரண்டாம் அரங்கு:
  •   நிறைவு கலந்துரையாடல்  (மதியம் 12:00 - 1:00)


***
Share:

மரபிலக்கியம் கம்ப ராமாயண அரங்கு - பார்கவி

 கைகேயி சூழ்வினை/நகர் நீங்கு படலம்


1.            சேண் உலாவிய நாளெலாம் உயிர் ஒன்று போல்வன செய்து, பின்

ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த, ஒன்றும் இரங்கிலா

வாள் நிலாநகை மாதராள் செயல் கண்டு, மைந்தர்முன் நிற்கவும்

நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே (1540)


2.            தூபம் முற்றிய கார் இருட் பகை துள்ளி ஓடிட, உள் எழும்

தீபம் முற்றவும் நீத்து அகன்றென சேயது ஆர் உயிர் தேய, வெம்

பாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில், வெய்யவன்

கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன், குண குன்றிலே (1555)


3.            உந்தாது, நெய் வார்த்து உதவாது, கால் எறிய

நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்,

'செந்தாமரைத் தடங் கண் செவ்வி அருள் நோக்கம்

அந்தோ! பிரிதுமோ? ஆ! விதியே! ஓ!' என்பார். (1715)


4.            ஐயனைக் காண்டலும், அணங்கு அனார்கள் தாம்,

மொய் இளந் தளிர்களால் முளரி மேல் விழும்

மையலின் மதுகரம் கடியும் ஆறு எனக்

கைகளின் மதர்நெடுங் கண்கள் எற்றினார் (1772)


5.            கையால் நிலம் தடவி, கண்ணீர் மெழுகுவார்

'உய்யாள் போல் கோசலை' என்று, ஓவாது வெய்து உயிர்ப்பார்;

'ஐயா! இளங் கோவே! ஆற்றுதியோ நீ' என்பார்;

நெய் ஆர் அழல் உற்றது உற்றார், அந் நீள் நகரார் (1709)


இராமன் – இலக்குவன் உரையாடல்

6.            கண்ணின் கடைத் தீயுக, நெற்றியில் கற்றை நாற,

விண்ணிற் சுடரும் சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப,

உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க, நின்ற

அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் (1717)


7.            விண் நாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர், மற்றும்

எண் நாட்டவர், யாவரும் நிற்க; ஓர் மூவர் ஆகி,

மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர் வந்தபோதும்,

பெண் நாட்டம் ஒட்டேன், இனிப் பேர் உலகத்துள்' என்னா (1723)


8.            காலைக் கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி,

ஞாலத்தவர் கோ மகன், அந் நகரத்து நாப்பண்,

மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை

வேலைத் திரிகின்றதுபோல், திரிகின்ற வேலை (1724)


9.            வீறாக்கிய பொற்கலன் வில்லிட, ஆரம், மின்ன,

மாறாத் தனிச்சொல் துளிமாரி வழங்கி வந்தான்;

கால்தாக்க நிமிர்ந்து, புகைந்து, கனன்று, பொங்கும்

ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன (1726)


10.          மின்னொத்த சீற்றக் கனல்விட்டு விளங்க நின்ற,

பொன்னொத்த மேனிப் புயலொத்த தடக்கை யானை,

'என்னத்த! என், நீ இறையோரை முனிந்திலாதாய்,

சன்னத்தன் ஆகித் தனுஏந்துதற்கு ஏது?' என்றான் (1727)


11.          'மெய்யைச் சிதைவித்து, நின் மேல் முறை நீத்த நெஞ்சம்

மையில் கரியாள் எதிர், நின்னை அம் மௌலி சூட்டல்

செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவர் ஏனும்;

துய்யைச் சுடுவெங்கனலின் சுடுவான் துணிந்தேன் (1728)


12.          'நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க,

புன்கண் பொறி யாக்கை பொறுத்து, உயிர் போற்றுகேனோ-

என் கட்புலமுன் உனக்கு ஈந்துவைத்து, "இல்லை" என்ற

வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல்?' என்றான் (1732)


13.          நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே

பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!

விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான். (1734)


14.          ஆன்றான் பகர்வான் பினும்; 'ஐய! இவ் வைய மையல்

தோன்றா நெறி வாழ் துணைத் தம்முனைப் போர் தொலைத்தோ?

சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ?

ஈன்றாளை வென்றோ, இனி, இக் கதம் தீர்வது?' என்றான். (1739)


15.          'நல் தாதையும் நீ; தனி நாயகன் நீ; வயிற்றில்

பெற்றாயும் நீயே; பிறரில்லை; பிறர்க்கு நல்கக்

கற்றாய்! இது காணுதி இன்று' எனக் கைம் மறித்தான்;

முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான். (1737)


16.          'நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை

தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;

என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் -

தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான் (1741)


17.          சீற்றம் துறந்தான்; எதிர்நின்று தெரிந்து செப்பும்

மாற்றம் துறந்தான்; மறை நான்கு என வாங்கல் செல்லா

நால் தெண் திரை வேலையின், நம்பி தன் ஆணையாலே,

ஏற்றம் தொடங்காக் கடலின், தணிவு எய்தி நின்றான் (1742)


***

அயோத்தியா காண்டம் முழுவதும் வாசிக்க -

https://archive.org/details/vrajeshkumar_gmail_061/02-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

***

Share:

கவிதை அரங்கு - ரம்யா


காத்திருப்பும் திரும்புதலும்

1

அம்மா வந்துவிடு - இளங்கோ கிருஷ்ணன்

கொட்டித் தீர்க்கிறது பேய் மழை

எங்கும் மென்னிருள்

விரைவில் அடரக்கூடும்

நடுவழியில் அந்தகாரத்தில்

நின்றுகொண்டிருக்கிறேன்

பார்த்துக்கொண்டிருக்கும்போதே

இடியிறங்கிய மரம் பற்றி எரிகிறது

இந்தப் பாழடைந்த மண்டபமோ

காற்றில் கூகூவெனக் கதறுகிறது

நெடுவழித் தனியனுக்கு யாருமில்லை

இன்னும் எவ்வளவு நேரம்

காத்திருப்பது

அம்மா வந்துவிடு


2

கதவு - இளங்கோ கிருஷ்ணன்

திறக்கப்படாத கதவின் முன்

நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்

கதவின் பின்புறம் அவ்வபோது

உறும்

பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்

அங்கு யாருமில்லை எனக்

கருதிவிடாது பார்த்துக்கொள்கின்றன

அயர்விலும் ஆற்றாமையிலும்

திரும்பிச் செல்ல

எத்தனிக்கும் கனந்தோறும்

கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று

உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது

திறக்கப்படாத கதவின் முன்

நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்


3

போகன்

பல தருணங்களில்

நான் செல்ல வேண்டிய சொல்லுக்கு

முந்தைய சொல் வரை

என்னால் சொல்ல முடிந்திருக்கிறது.

ஆனால் அந்தச் சொல்லை அல்ல

செல்ல வேண்டிய இடத்துக்கு

மிக அருகில் போய் திரும்பியிருக்கிறேன்


ஏதோ ஒன்று

ஒரு சுவர் போன்ற

ஜவ்வுத் திரை போன்ற

மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கும்போது

எந்தத் தடையுமின்றி

பாதை தெளிவாக இருப்பது போல்

தோற்றத்தைத் தரக்கூடிய

நாம் அந்த இறுதித் துளியை

ருசித்துவிட முடியும்

என்று ஏமாற்றுகிற

ஏதோ ஒன்று

இங்கு இருக்கிறது


4

குழந்தை - இளங்கோ கிருஷ்ணன்

எப்போதோ திரும்பிச் சென்றிருக்க வேண்டிய

குழந்தையது

தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல்

அதனை நிற்கச் செய்திருக்கிறது

சலனமின்மையும்

நிராகரிப்பும் அடர்ந்த கடைக்காரனின்

முகத்தைக் கண் திரளப் பார்க்கிறது

தன் கனவு மிட்டாயின் உருவம் ஏக்கமாய் இறுக

போதாத நாணயம் கொண்ட

தன்னை நிந்திக்கவும் அறியாத

அதன் பிரச்சனை திரும்பிச் செல்வதல்ல

வெறுங்கைகளுடன் திரும்பிச் செல்வதே

எப்போதோ திரும்பிச் சென்றிருக்க வேண்டிய

குழந்தையது

தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல்

அதனை நிற்கச் செய்திருக்கிறது.


5

மயக்குவித்தைக்காரன் பின் செல்லும் சிறுமி - இசை

எது உன்னை ஈர்த்தது அவ்விடம் நோக்கி

வசீகரம் கூடிய மாயக்கரங்கள்

வாவென்றழைக்க, கிளம்பிவிட்டாய்

மயக்கு வித்தைக்காரன் பின் செல்லும் சிறுமி நீ

சரளைக்கற்களின் மீது

மேடான மேட்டில்

எதற்கிந்த நடை

வியர்வைப் பெருக்கில் ஆடைகள் நவநவத்துவிட்டன

நீ சலித்து ஓயும் ஒவ்வொரு வேளையிலும்

அது தன் வனப்பின் சின்னஞ்சிறு துளியை

உன்மீது தெளிக்கிறது

நீ மறுபடியும் சிறுமியாகிறாய்

வேண்டாம் இவ்வலி என்று சொன்னால்

பாதி தூரம் வந்துவிட்டேனே

எனக் கலங்கும் நண்பா

அரவக்குட்டிகள் பதுங்கிக் கிடக்கும்

காட்டுவழி துவங்குகிறது

நல்லதற்கே சொல்கிறேன்

இப்போதேனும் திரும்பிப் போ


For Further Reading

(Will not to be discussed in mugam)

6

Wisława Szymborska (Female) (1996 – Nobel Prize in Literature)

தலைப்பு: வீடு திரும்புதல்

அவர் திரும்பிவிட்டார், ஏதும் பேசவில்லை

ஆனால் ஒன்று நிச்சயம்

ஏதோ ஒன்று அவரை மனமுடைந்து போகச்

செய்துவிட்டது

அவர் அறைக்கட்டிலில் விழுந்திருக்கிறார்

முழங்கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு

போர்வையின் கீழ் முகத்தைப் புதைத்து வைத்துக்

கொண்டு

அவருக்கு நாற்பது வயதாகிறது ஆனால் அது

இந்த நொடியில் அல்ல

அவர் இருக்கிறார்

அவர் தாயின் வயிற்றில் இருந்த அந்த மாதிரி

ஏழு சருமங்களின் மடிப்புகளுக்கு அப்பால்

பாதுகாக்கப்பட்ட இருளில்

நாளை அவர்

Homostasis MetaGalactic Space Travel பற்றி

விரிவுரையாற்றுகிறார்

ஆனால் இப்போது சுருண்டு படுத்துக் கொண்டு

தூங்கிப் போய்விட்டார்.


7

திரும்புதல் - இளங்கோ கிருஷ்ணன்

உறக்கத்திலிருந்து

விழிப்புக்கு வருவது போல

உன் பகையிலிருந்து

அன்புக்கு வருகிறேன். ஏதும் நடவாததாய்

புன்னகைத்துக் கொண்டிருக்கிறாய்

எல்லாம் வெறும் கனவா?

என்கிறேன். ஆரத் தழுவுகிறாய்

கனவில் நடந்தது

என்னவெனச் சொல்கிறேன். உண்மையில்

இதுதான் கனவு என்கிறாய். விழிப்பிலிருந்து

கனவுக்குச் செல்வது போல்

நான் பகைக்குள் நுழைகிறேன்.

***

Share:

மரபிலக்கிய அரங்கு - அந்தியூர் மணி

தானே தனி நெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,

தானே பெருஞ்சேமம் செய்யுமால்; - தானேயோர்

பூணாகத் தாற் பொலிந்து, பொங்கழல் சேர் நஞ்சுமிழும்

நீணாகத் தானை நினைந்து.   (அற்புதத் திருவந்தாதி.பா.எண். 14)


என்னுடைய நெஞ்சம் தானே தனியாக வேறு துணையின்றி இருக்கும் நெஞ்சம். இது தன்னைத் தானே உய்யக் கொள்ளும் பொருட்டு, ஒப்பற்ற, தன்னைப் பூணும் திருமேனியால் பொலிவு பெற்றுக் கொழுந்து பொங்கும் அழலின் வெம்மையைச் சேர்ந்த நஞ்சை உமிழும் நீண்ட நாகத்தை உடையவனைத் தியானம் செய்து, அவனைத் தனக்குள்ளே பெரிய சேமிப்பாகச் சேர்த்துக் கொள்ளும்.


அறிவானுந் தானே அறிவிப்பான் தானே

அறிவாய் அறிகின்றான் தானே-அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம்

அப்பொருளுந் தானே அவன்.(அற்புதத் திருவந்தாதி.பா.எண். 20)


இறைவன் எல்லாவற்றையும் அறிபவனும் தானாக இருக்கிறான். உயிர்களுக்கு அறிவிப்பவனும் அவனாகவே இருக்கிறான். அறிவாகவும் அறிகின்றவனாகவும் தானே; அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே; விரிந்த சுடரும் விரிந்த பாரும் விரிந்த ஆகாயமும் ஆகிய அப்பொருள்களும் அவன்.


கள்ளிக் கவட்டுஇடைக் காலை நீட்டிக்

         கடைக்கொள்ளி வாங்கி மசித்து, மையை

விள்ள எழுதி, வெடுவெடு என்ன

         நக்கு, வெருண்டு, விலங்கு பார்த்துத்

துள்ளி, சுடலைச் சுடுபி ணத்தீச்

         சுட்டிய முற்றும் சுளிந்து, பூழ்தி

அள்ளி அவிக்க,நின் றாடும் எங்கள்

         அப்பன் இடம்திரு ஆலங்காடே.(திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் -1.பா. எண் 2)


கள்ளி மரத்தின் கிளைகளுக்கு இடையல் காலை நீட்டிக் கொண்டு, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையை எடுத்து மசிய அரைத்து, அதனைத் தனது கண்ணில் மையாக எழுதி, வெடுவெடு என்று சினக்குறிப்பு தோன்றுமாறு நகைத்து, வெருண்டு விலங்குகளைப் போல இங்கும் அங்குமாகப் பார்த்து, துள்ளிக் குதித்து,  சுடலையில் பிணத்தைசு சுடுகின்ற தீயை வெகுண்டு நோக்கி,  அதனைப் புழுதியைக் கொண்டு அவிக்க முயலுகின்ற பேய்கள் வாழும் காட்டிலே ஆடுகின்ற எங்கள் அப்பனுக்கு இடமாக விளங்குவது திருவாலங்காடு .


நிணந்தான் உருகி நிலந்தான்

         நனைப்ப, நெடும்பல் குழிகண்பேய்

துணங்கை எறிந்து சூழும்

         நோக்கிச்சுடலை நவிழ்த்து, எங்கும்

கணங்கள் கூடிப் பிணங்கள்

         மாந்திக் களித்த மனத்தவாய்

அணங்கு காட்டில் அனல்கை

         ஏந்தி அழகன் ஆடுமே. (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் -2.பா. எண் 2)

பிணத்தைச் சுடுவதால் கொழுப்பானது உருகி நிலம் ஈரமாகிறது. நீண்ட பற்களையும் குழிந்த கண்களையும் உடைய பேய்கள் தமது இருகைகளையும் மார்பில் அடித்தபடி ஆடி, சுடலையை மிகவும் விரும்பி, பேய்க் கூட்டமானது எங்கும் நிறைந்து பிணத்தை உண்டு களித்த மனத்தோடும் விளங்குகின்றது.  இவ்வகையான துன்பத்தைத் தரும் சுடுகாட்டில் எங்கள் இறைவனாகிய அழகன் ஆடுகின்றான்.

Share:

கவிதை அரங்கு - அதியமான்

தேவதச்சன் கவிதைகள்

என் டிபன் பாக்ஸ்

புத்தரின் பற்களில்

ஒன்று

கோயிலில் இருக்கிறது

அருங்காட்சியகங்களில், சந்தைகளில்

சுறாவின் பற்கள்

நிறையவே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன

நான் என்

டிபன் பாக்ஸை

தைரியமாய் அந்தப்

பற்களுக்குப் பக்கத்தில்

வைத்து விட்டுச் செல்வேன் அவைகள்

என் டிபனை

எடுத்துத் தின்று விடாதுதானே…..

எதற்கும் நீ

பார்த்துக்கொள்

 

 

பிழை

என் பெயர் எழுத்துப்பிழை

சைக்கிள் கடை போர்டுகளில்

ஆட்டோக்களில்

பொதுக்கழிப்பறைச் சுவர்களில்

அஞ்சலி போஸ்டர்களில்

அரசு அறிவிப்புகளில்

கோயில் கொடை அழைப்பிதழ்களில்

என்னைப் பார்க்கலாம்

நான்

இன்னும்

வரலாற்றில் காணாமல் போகாத

ஒலிமனிதனின் காலச்சுவடு

ஒரு

இமை கொட்டாத பேரிருள்

ஒரு சிறு சுடர் கூட

புதிய ஒரு சொல்லின் மழலை

உதிர்ந்துவிட்ட லோயா மலர்

என்னைக் கண்டதும் உங்களுக்கு சிரிப்பாணி வரலாம்

அல்லது

கோபம் வரலாம் அவசரமாய்

என்னை அழிக்க உங்ககள் கை நீள்கிறது

அவசர அவசரமாய்

 

சொத்

கி.மு. 464 இல்

கீழே

விழுந்த ஆப்பிளின்

சொத்

என்ற

சொல்,

எந்தக் கேள்விக்கு பதில்

 

கொண்டாட்டம்

கடந்த ஐந்து நிமிடங்களாக

என் அலைபேசியில்

பொய்ச் செய்தி

ஏதும் வரவில்லை

தொலைக்காட்சியில்

அரசு

தந்திரமான திட்டங்கள்

எதுவும் அறிவிக்கவில்லை

சாலையில்

எந்தவித வீரிடலும்

கேட்கவில்லை

இந்த ஐந்து நிமிடத்தைக்

கொண்டாடுவேன்

யாரோடு?

இதோ இந்த

சாலையோரம் நிற்கும்

நோஞ்சான் செடியோடு

அதன்

கீழே

உடைந்து கிடக்கும்

கடவுளின் கடிகாரத்தோடு

***

Share:

Blog Archive