கவிதை அரங்கு - இளம்பரிதி (ஜென் கவிதைகள்)

துறவி ஹான் ஷானின் வாழ்வும் அவரின் ஜென் கவிதைகளும்


கவிதைகள்

1. வெண்மேகங்களின் மத்தியில்
-
குளிர்ந்த மலைக்குச் செல்லும்
பாதையில் ஏறுகிறேன். குளிர்ந்த மலைக்குச்
செல்லும் அந்த முடிவற்ற பாதையில்.
சிறு கற்கள் சிதறிய பள்ளத்தாக்குகள்
நீளமானவை. ஓடைகள் அகலமானவை;
அடர்புற்கள் நிரம்பியவை. பாசி
வழுக்குகிறது, மழை பெய்திராதபோதும்.
ஊசியிலை மரங்கள் பெருமூச்செறிகின்றன, ஆனால்,
காற்று அல்ல அது. உலகத்தின் சிறுபொறிகளை
அறுத்துக்கொண்டு, வெண்மேகங்களின் மத்தியில்
என்னுடன் அமர்ந்திருக்க யாரால் முடியும்?
-
I climb the road to Cold Mountain,
The road to Cold Mountain that never ends.
The valleys are long and strewn with stones;
The streams broad and filled with thick grass.
Moss is slippery though no rain has fallen;
Pines sigh but it isn't the wind.
Who can break from the snares of the world
And sit with me among the white clouds?
-

2. புழுதி என் தலையில் படியும்வரை

-
எனக்கொரு உடல் இருக்கிறதா, இல்லையா ?
நான் நான்தானா, இல்லையா ? இந்தக்
கேள்விகளை அசைபோட்டபடியே
மலைமுகட்டில் சாய்ந்து அமர்ந்திருக்கிறேன்,
ஆண்டாண்டு காலமாய்.
என் பாதங்களுக்கிடையில் புல் வளரும்வரை.
செந்நிறப் புழுதி என் தலையில் படியும்வரை. நான்
இருந்துவிட்டேன் என்றெண்ணி, உலகினர்
வருகிறார்கள், என் சடலத்தருகில்
ஒயினும் பழமும் படைக்க.

--
Have I a body or have I none?
Am I who I am or am I not?
Pondering these questions,
I sit leaning against the cliff as the years go by,
Till the green grass grows between my feet
And the red dust settles on my head,
And the men of the world, thinking me dead,
Come with offerings of wine and fruit to lay by my corpse.

-

3. வீடு திரும்பிவிட்டேன்

முப்பது வருடங்களுக்கு முன்னால் பிறந்தேன்
இந்த உலகில். ஆயிரம், பத்தாயிரம் மைல்கள்
அலைந்து திரிந்திருக்கிறேன். பசும்புல்
அடர்ந்து வளரும் நதிகளுக்கருகில் , செம்மண்
புழுதி பறக்கும் எல்லைகளுக்கு அப்பால். சிரஞ்சீவி
வாழ்வை  விரயமாய்த் தேடி ஒளஷதங்கள்
வடித்திருக்கிறேன். கிரந்தங்களை வாசித்தேன்.
சரித்திரத்தின் பாடல்களைப் பாடினேன். இன்று
வீடு திரும்பிவிட்டேன், குளிர்ந்த மலைக்கு. என்
தலையை ஓடையில் கிடத்தி
என் காதுகளைக் கழுவ.

---  

Thirty years ago I was born into the world.
A thousand, ten thousand miles I've roamed.
By rivers where the green grass grows thick,
Beyond the border where the red sands fly.
I brewed potions in a vain search for life everlasting,
I read books, I sang songs of history,
And today I've come home to Cold Mountain
To pillow my head on the stream and wash my ears.

***
Share:

0 comments:

Post a Comment

Blog Archive